- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

Grow your business by getting relevant and verified leads
நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

  Jun 07, 2024     Education

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லுாரிகளில் கடந்த காலங்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. இந்தாண்டு நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவித்து இருந்தது. அதன்படி நர்சிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் வரும் 10ம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நுழைவு தேர்வு அடுத்தமாதம் 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நர்சிங் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இருக்கும். இயற்பியல் - 20 மதிப்பெண், வேதியியல் - 20, உயிரியல் - 20, ஆங்கிலம் - 20, நர்சிங் அப்டிடியூட் - 20 என மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இடபுள்யூ, ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி, தேர்வர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதுமானது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலமாகவே செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது: 17 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். திருமணமாகி இருந்தாலும் நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என சுகாதார துறையின் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

icon
Kumbakonam Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Kumbakonam Ads

Copyrights © 2024 .   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.